உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவள்ளூர்:சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தவுள்ள நேரடி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 17ம் தேதி துவங்குகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 3,665 காலி பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், வரும் 17ம் தேதி முதல் துவங்க உள்ளது. பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பயிற்சியில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 84898 66698, 96264 56509 ஆகிய மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை