மேலும் செய்திகள்
செய்யூர் அரசு மருத்துவமனையில் இருக்கைகள் அமைப்பு
08-Sep-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, இரு பீரோக்களில் இருந்து பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றது. ஆபத்தான நிலையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் தனியாக வசித்து வருபவர் ராஜேஸ்வரி அம்மாள், 85. நேற்று மாலை, மர்ம கும்பல் ஒன்று அவர் வீட்டிற்குள் புகுந்தது. மூதாட்டியின் தலையில் பலமாக தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார்.அங்கிருந்த இரு பீரோக்களை திறந்து, அதிலிருந்தவற்றை திருடிச் சென்றனர். பலத்த காயமடைந்த மூதாட்டி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீரோவில் என்ன இருந்தது என்பது மூதாட்டிக்கு மட்டுமே தெரியும் என்பதால், திருடு போன பொருட்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
08-Sep-2025