உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

பழவேற்காடு கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

பழவேற்காடு,:உலக கடற்கரை துாய்மை தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நிலையான சுற்றுச் சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், பழவேற்காடு கடற்கரை பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடற்கரையில் ஆங்காங்கே குவிந்திருந்த கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மட்கும், மட்காத என தரம்பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது தன்னார்வலர்கள் கூறியதாவது: கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இவற்றால், கடற்கரை அழகு பொலிவிழப்பதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கிறது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகளால் கடலின் சுற்றுச்சூழலும் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விகுறியாகிறது. கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தவிர்த்து, சுற்றுலா பயணியர் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். திருவள்ளூர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நேற்று, துாய்மை இந்தியா பிரசார விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், மாவட்ட அஞ்சல் துறை தலைமை அலுவலக ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி