உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவிலில் தங்கம் பித்தளை திருட்டு

கோவிலில் தங்கம் பித்தளை திருட்டு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, 48. இவர், இப்பகுதியில் உள்ள காரணீஷ்வரர் கோவிலில் அறங்காவலராக பதவி வகித்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு கோவில் பூசாரி சுதாகர் என்பவர் கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, கோவில் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகைகள், பூஜைக்கு பயன்படுத்தும் 2,000 மதிப்புள்ள பித்தளை பொருட்கள் மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, பிரபு அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை