உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; 2.90 லட்சம் கால்நடைகள் இலக்கு

 கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; 2.90 லட்சம் கால்நடைகள் இலக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2.90 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி முகாம், வரும் 29ம் தேதி முதல் துவங்குகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் 2.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம், வரும் 29ம் தேதி துவங்கி, ஜன., 28ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருமைகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டிகளுக்கு, முகாம் நடைபெறும் நாளன்று, கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ