கும்மிடி டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக இருந்த அண்ணாதுரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் டி.எஸ்.பி., பயிற்சி பெற்ற ஜெய்ஸ்ரீ, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.பயிற்சிக்கு பின் முதல் பதவியாக கும்மிடிப்பூண்டியில் பணிபுரிந்த பெண் டி.எஸ்.பி.,க்கள் வரிசையில், கல்பனா தத், ரித்து, கிரியாசக்தியை தொடர்ந்து நான்காவதாக தற்போது ஜெய்ஸ்ரீ பொறுப்பேற்றுள்ளார்.