பெட்டி கடையில் குட்கா பறிமுதல்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, பாப்பன்குப்பம் கிராமத்தில், தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அங்குள்ள பெட்டி கடை ஒன்றில், 212 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தப்பாஷ், 22, என்பவரை, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.