மேலும் செய்திகள்
பைக்கில் குட்கா கடத்திய கோலமாவு வியாபாரி கைது
16-Oct-2025
கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட, 104 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பொம்மாஜிகுளம் கிராமத்தில் உள்ள மாநில எல்லையோர போலீஸ் சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்த 104 கிலோ குட்கா பண்டல்களை பறிமுதல் செய்த போலீசார், சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமான் நாராயணன், 39, என்பவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Oct-2025