ஹரிச்சந்திராபுரம் சாலை குப்பையால் துர்நாற்றம்
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், ஹரிச்சந்திராபுரம் ஊராட்சியில், அரக்கோணம் சாலையில் கொட்டப்படும் குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது. ஹரிச்சந்திராபுரம் கிராமம், முஸ்லிம் நகர் பகுதியில் சேகரமாகும் குப்பை, அரக்கோணம் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த குப்பையுடன் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.அப்பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.