உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் வருகையையொட்டி நாளை கனரக வாகனங்களுக்கு தடை

முதல்வர் வருகையையொட்டி நாளை கனரக வாகனங்களுக்கு தடை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிராமத்தில், நாளை தமிழக முதல்வர் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து மீஞ்சூர் வழியாக, பொன்னேரி வரும் தமிழக முதல்வரின் வருகையையொட்டி, மீஞ்சூர் - பொன்னேரி - தச்சூர் சாலையில், காலை 7:00 - மாலை 3:00 மணி வரை, கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம் என, செங்குன்றம் போக்குவரத்து காவல் சரகம் சார்பில் கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என, ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை, திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலை மற்றும் தச்சூர் - பழவேற்காடு சாலை வழியாக பயணிக்கும்.எனவே, நிகழ்ச்சி நாளன்று மட்டும் சரக்கு பெட்டக வாகனங்கள், டிரெய்லர் லாரிகள் மற்றும் இதர சரக்கு வாகனங்கள், மீஞ்சூர் - பொன்னேரி - தச்சூர் சாலையில் செல்ல வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ