உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஹாக்கி: எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி அபார வெற்றி

ஹாக்கி: எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி அபார வெற்றி

சென்னை :தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்த ஹாக்கி போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி அபார வெற்றி பெற்றது. புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளான ஆக., 29ம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மத்திய அரசின் 'சாய்' மற்றும் 'பிட் இந்தியா' அமைப்பின் ஆதரவில், தமிழ்நாடு ஹாக்கி யுனிட் சார்பில், ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில், பெண்களில் எம்.ஓ.பி., வைஷ்ணவா, ராணிமேரி கல்லுாரி, தமிழக போலீஸ், ஆண்களில் லயோலா, செயின்ட் ஜோசப், டி.ஜி., வைஷ்ணவா, ஜேப்பியார் பல்கலை ஆகிய ஏழு அணிகள் மோதுகின்றன. பெண்களுக்கான முதல் போட்டியில் எம்.ஓ.பி., அணி, 20 - 0 என்ற கணக்கில் ராணிமேரி கல்லுாரி அணியை வீழ்த்தியது. ஆண்களில் லயோலா அணி, 4 - 1 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப் அணியையும், டி.ஜி., வைஷ்ணவா அணி, 6 - 0 என்ற கணக்கில், ஜேப்பியார் அணியையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி