உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழங்குடியினருக்கு வீடு கட்டும் பணி விறு விறுப்பு

பழங்குடியினருக்கு வீடு கட்டும் பணி விறு விறுப்பு

திருவள்ளூர்:கைவண்டூர் ஊராட்சியில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கைவண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் பழங்குடியினர் 50 பேர் வசித்து வருகின்றனர். குடிசை வீடுகளில், 50 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் அவர்கள், சொந்த வீடு கட்டித்தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தனர்.இதையடுத்து, முதல் கட்டமாக 9 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கைவண்டூர் ஊராட்சி பகுதியில் 4.35 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அதே ஊராட்சியில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 12 மற்றும் தாட்கோ திட்டத்தில் 18 வீடுகள் கட்ட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அப்பணியும் விரைவில் துவங்கி, இந்த ஆண்டுக்குள் நிறைவடைந்து பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கும் வகையில், பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை