மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
27-May-2025
திருவள்ளூர்:அக்னி நட்சத்திரம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், ஜூன் முதல் வழக்கம் போல் செயல்படும்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், மாதந்தோறும் புதன் கிழமையன்று நடைபெறும். இம்மாதம் அக்னி வெயில் காரணமாக, அந்த முகாம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, ஜூன் மாதத்தில் இருந்து வழக்கம்போல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம்கள் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
27-May-2025