உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் கடைகளின் விற்பனை உரிமம் ரத்து: கலெக்டர்

போதை பொருள் விற்பனை கண்டறியப்பட்டால் கடைகளின் விற்பனை உரிமம் ரத்து: கலெக்டர்

திருவள்ளூர்:போதை பொருள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்.பி., சீனிவாச பெருமாள், ஆவடி துணை கமிஷனர் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில், போதை தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகில் சிறு பெட்டி கடை மற்றும் தள்ளு வண்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அபாராதம் மற்றும் கடைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாணவர்களின் நலன் கருதி ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவரங்கம் எற்படுத்திக் கொள்ளலாம். கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்.அப்போது, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை கண்டறியப்பட்டால், கடையின் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கடைகளின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளூர் கற்பகம், திருத்தணி தீபா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி