உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரிசை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

தரிசை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

திருத்தணி: விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களை, விளைநிலங்களாக மாற்றுவதற்கு வேளாண் துறையினர், இரண்டரை ஏக்கருக்கு, 9,600 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, உதவி இயக்குநர் பிரேம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களில் விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிக் கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு வேளாண் துறையினர் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, விவசாயிகளின் நிலத்தில் முட்செடிகள், மேடு, பள்ளங்கள் இருந்தால், அதை சீரமைப்பதற்கு விவசாயிகள் அதிக தொகை செலவிட வேண்டியுள்ளன. இதனால் பெரும்பாலான விவசாயிகள், நிலத்தை சுத்தம் செய்து சீரமைப்பதற்கு போதிய நிதியுதவி இல்லாததால் பயிரிடாமல் விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், மாவட்ட வேளாண் துறையினர் விவசாயிகள் நலன்கருதி, தரிசு நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் விளைநிலங்களாக மாற்றுவதற்கு விவசாயிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு வழங்கியுள்ளது. திருத்தணி வேளாண் துறை பொறுப்பு உதவி இயக்குநர், பிரேம் கூறியதாவது: திருத்த ணி ஒன்றியத்தில் தரிசு நிலம் வைத்துள்ள விவசாயிகள் உடனடியாக விளைநிலமாக மாற்றுவதற்கு அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.அதாவது இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு, 9,600 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத் தொகை பெற விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் கூடிய விண்ணப்பத்தை அந்தந்த வேளாண் உதவி அலுவலர்கள் அல்லது உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி, அரசின் ஊக்கத் தொகை பெறலாம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ