உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகை கடையில் 2வது நாளாக வருமான வரி சோதனை

நகை கடையில் 2வது நாளாக வருமான வரி சோதனை

பொன்னேரி:நகைக்கடை மற்றும் உரிமையாளர் வீட்டில், தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பொன்னேரி அரிஅரன் பஜார் வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில், நேற்று முன்தினம் காலை, சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடை மற்றும் உரிமையாளர் வீட்டில் விடிய விடிய சோதனை நடந்தது. இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. சோதனையின்போது, நகைகள் மொத்தமாக கொள்முதல் செய்தது, அவற்றை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்கள் மற்றும் கையிருப்பு பணம் உள்ளிட்டவற்றை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நகைக்கடையின் ஷட்டர் மூடப்பட்டு, இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள், தொடர்ந்து சோதனை பணிகளில் ஈடுபட்டிருப்பதால், வியாபாரிகள் இடையே பரபரப்பு தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ