உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் சோதனை

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் சோதனை

திருவள்ளூர்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கை கலெக்டர் ஆய்வு செய்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 3,669 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. தேர்தல் நேரத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.தேர்தல் முடிந்ததும், அந்த இயந்திரங்கள் அனைத்தும், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.அந்த சேமிப்பு கிடங்கை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை