உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி பைனலில் ஜார்க்கண்ட் - பஞ்சாப்

தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி பைனலில் ஜார்க்கண்ட் - பஞ்சாப்

சென்னை: சென்னையில் நடந்து வரும் சப் - ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு, பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் தகுதி பெற்றுள்ளன. தேசிய அளவில் ஆடவருக்கான 15வது தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை, 'ஹாக்கி இந்தியா' மற்றும் 'ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு' அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதி போட்டியில், பஞ்சாப் உத்தர பிரதேசம் அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், பஞ்சாப் அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் உத்தர பிரதேசம் அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில், ஜார்க்கண்ட் அணி, மத்திய பிரதேசம் அணியை எதிர்கொண்டது. காலிறுதியில் கோல் மழை பொழிந்த ஜார்க்கண்ட் அணி, அரையிறுதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 - 1 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசம் அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பலம் பொருந்திய பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள், இறுதி போட்டியில் சந்திக்கின்றன. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் களத்தில் சந்திக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை