உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிப்படை வசதி கேட்டு காக்களூர் மக்கள் மறியல்

அடிப்படை வசதி கேட்டு காக்களூர் மக்கள் மறியல்

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் அடிப்படை வசதிகள் கேட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் சாலை மோசமான நிலையில் உள்ளதால் அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலை காக்களூர் புறவழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை