உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிரம்பி வழியும் கேசாவரம் அணைக்கட்டு

நிரம்பி வழியும் கேசாவரம் அணைக்கட்டு

கடம்பத்துார் வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என, இரு ஆறுகளாக பிரிகிறது.கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில் செல்லும் நீர், பூண்டி ஏரிக்கு செல்கிறது.இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர், கூவம் ஆறாக மாறி, பேரம்பாக்கம், மணவாள நகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது.தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி, 1,150 கன அடி நீர் வெளியேறி வருவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பூண்டி ஏரிநீர் மட்டம் உயர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !