கற்கள் பெயர்ந்த குமாரசேரி சாலை
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது குமாரசேரி ஊராட்சி. இங்கிருந்து, இருளஞ்சேரி வழியாக நரசிங்கபுரம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நரசிங்கபுரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.இந்த சாலை மிகவும் சேதமடைந்த ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும், குமாரசேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் குவிந்து வரும் குப்பையால் ஏற்படும் துார்நாற்றத்தால் வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையோரம் சேகரமாகும் குப்பையை அகற்றவும், கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்கவும் வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.