பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
கடம்பத்துார், கடம்பத்துார் வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துாரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 120 ஆண்டுகள் பழமையான இக்கோவில் தற்போது சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.