உள்ளூர் செய்திகள்

வக்கீல்கள் மறியல்

திருவள்ளூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் எதிரே வக்கீல் கண்ணன் நேற்று முன்தினம் கத்தியால் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திருவள்ளூரில் வக்கீல்கள் கோர்ட் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் எதிரில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டமாக நிறைவேற்ற கோரி சென்னை--திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்ததும், போலீசார் அவர்களிடம் பேசி, மறியலை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !