மேலும் செய்திகள்
சட்டப்பணிகள் புகைப்பட கண்காட்சி
01-Nov-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜூலியட் புஷ்பா துவக்கி வைத்தார்.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி நளினி தேவி முன்னிலை வகித்தார். இதில், சட்டப்பணி குழுவின் வழக்கறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொதுமக்களிடம் தேசிய சட்டப் பணி குழு வழங்கும் சட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.
01-Nov-2024