மேலும் செய்திகள்
புதுச்சேரி மது விற்றவர் கைது
30-May-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சின்னமாங்கோடு மீனவ கிராமத்தில், சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று, அந்த கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 33, என்பவர் வீட்டின் அருகே மது விற்றபோது, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து எட்டு குவார்ட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
30-May-2025