உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபானம் விற்றவர் கைது

மதுபானம் விற்றவர் கைது

மீஞ்சூர்:சட்டவிரோத மதுபானம் விற்பனையை தடுக்கும் வகையில், செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று, மீஞ்சூர், எண்ணுார், மணலி, அத்திப்பட்டு ஆகிய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியில், டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி இயங்கி வந்த மதுக்கூடத்தில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.இதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டு வந்த மணலி, மாத்துார் பகுதியைச் சேர்ந்த சேகர், 62, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி