மேலும் செய்திகள்
சிறுபான்மையினருக்கு கடன் விண்ணப்பிக்க அழைப்பு
16-May-2025
திருவள்ளூர்:சிறுபான்மையினர் மேம்பாட்டிற்காக குறைந்த வட்டியில் தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக, சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக்கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன், ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி, திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8, பெண்களுக்கு 6 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு, ஆண்களுக்கு 5, பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு, 7 சதவீதம் வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் பெற்று கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து, வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
16-May-2025