உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் மத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் மத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாமல், கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கடந்தாண்டு ஜனவரி மாதம், திருத்தணி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முரளி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், மத்துார் அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.பின், நபார்டு -2023 - -24ம் ஆண்டு திட்டத்தின், 3.48 கோடி ரூபாய் மதிப்பில், 14 வகுப்பறைகள், 4 கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்து, அதே மாதம் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.பள்ளி கட்டடத்தில், தரைத்தளம், முதல்தளம், இரண்டாவது தளத்தில், 14 வகுப்பறைகளும், ஒரு ஆண் கழிப்பறையும், 3 பெண் கழிப்பறையும் கட்டும் பணிகள் முழுமையாக 20 நாட்களுக்கு முன் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் புதிய வகுப்பறைகள் திறக்காததால் மாணவர்கள் குறுகிய வகுப்பறைகளிலும், திறந்தவெளியிலும் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய வகுப்பறைகளை திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து உதவி செயற்பொறியாளர் முரளி கூறுகையில், ''புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடித்து, கட்டடத்தின் சாவியையும் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டோம். புதிய வகுப்பறைகள் திறந்து பயன்பாட்டிற்கு விடுவது மாவட்ட நிர்வாகம் அரசின் கொள்கை முடிவாகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ