உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருப்பந்தியூர் சப்த முனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருப்பந்தியூர் சப்த முனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருப்பந்தியூர்:கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சி பகுதியில், சப்த முனீஸ்வரர் கோவிலை பகுதிவாசிகள் புதிதாக அமைத்தனர்.இக்கோவிலில், கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பிரவேச பலி, வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை, சிலைகள் பிரதிஷ்டையும் நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு 108 மூலிகை யாக பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட சப்த முனீஸ்வரர், விநாயகர், முருகர் சிலைகள், காலை 8:30 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.இதில், திருப்பந்தியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை