மேலும் செய்திகள்
வயல் வெளியில் வாலிபர் சடலம் மீட்பு
26-Sep-2025
குன்றத்துார்: சிறுகளத்துாரில், சாலையோரம் காலி மனையில் தேங்கி கிடந்த மழைநீரில், வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. குன்றத்துார் அருகே உள்ள சிறுகளத்துார் பகுதியில், சாலையோரம் உள்ள காலி நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரில், வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அதை கண்ட அக்கம் பக்கத்தினர், திருமுடிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இறந்தவர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பிரம்மநாதன், 38, என்ற லாரி ஓட்டுநர் என்பதும், இவர் நேற்று முன்தினம் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், சிறுகளத்துார் அருகே லாரியை நிறுத்தி, அளவுக்கு அதிகமாக மது குடித்ததும் தெரிய வந்தது. மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Sep-2025