மேலும் செய்திகள்
பேருந்து நிலையத்தில் சிக்கிய போன் திருடன்
24-Jan-2025
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் பகுதியில், தனியார் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களான மோகன்ராஜ், அசாருதீன் ஆகியோரது மொபைல் போன்கள், இரண்டு தினங்களுக்கு முன் திருடு போனது.இது தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.சந்தேகத்தின்படி, அதே உணவகத்தில் சர்வராக பணிபுரியும், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த, சரவணமூர்த்தி, 45, என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மொபைல் போன்களை திருடியது தெரிய வந்தது. அதையடுத்து, போலீசார் சரவணமூர்த்தியை கைது செய்து, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
24-Jan-2025