உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓசியில் பெட்ரோல் கேட்டு மிரட்டியவர் கைது

ஓசியில் பெட்ரோல் கேட்டு மிரட்டியவர் கைது

மப்பேடு:மப்பேடு அடுத்த பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பிரகாஷ் மகன் திவாகர், 36. தந்தை நடத்தி வரும் பெட்ரோல் பங்கை கவனித்து வருகிறார். கடந்த 7 ம் தேதி இவரது பெட்ரோல் பலக்கிற்கு ஹீரோேஹாண்டா இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்கள் ஊழியர்களிடம் ஓசியில் பெட்ரோல் போட வேண்டுமென மிரட்டியுள்ளனர். பங்க் உரிமையாளர் திவாகர் விசாரித்த போது அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து திவாகர் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் மிரட்டி சென்றது சத்தரை கிராமத்தை சேர்ந்த அபியூத், 24 மற்றும் அவரது நண்பர் அப்பாத்துரை என தெரிந்தது. அபியூத்தை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ