உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

திருத்தணி:திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 61. இவர். கடந்த 23ம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தின் மீது கீரை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, மரத்தின் கிளை உடைந்து கிழே விழுந்தார்.இதையடுத்து, பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை