மேலும் செய்திகள்
தவறி விழுந்து பெயின்டர் உயிரிழப்பு
03-Nov-2025
கும்மிடிப்பூண்டி: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டிலால் ராம், 32. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தாணிப்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, தொழிற் சாலையின் மேல்தளத்தில், நடந்தபடி மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மேல்தளம் அமைந்துள்ள, 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு பொது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
03-Nov-2025