கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்தியவருக்கு வலை
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், இ.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 55; இவர், சூரியநகரம் ஊராட்சி, கஜலட்சுமிபுரம் பகுதியில் அரசு அனுமதியுடன் கல்குவாரி நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், மதுபோதையில் கல்குவாரி அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்தார்.பின், ஆத்திரமடைந்து கோவிந்தராஜ், கற்களால் கல்குவாரி அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தார். மேலும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து ரவி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடி கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.