மேலும் செய்திகள்
இரட்டை கொலை வழக்கில் கைதான இருவருக்கு 'குண்டாஸ்'
31-Jul-2025
ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை அடுத்த அதிலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில், ஆந்திர மாநிலம், காளஹஸ்தியைச் சேர்ந்த மணி, 55, என்பவர், காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, நாகேஸ்வரராவ் தனது நிலத்தை பார்க்க சென்றபோது, மணி தலையில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, அவர் பென்னலுார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 45, என்பவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் விசாரித்த பின், போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு, காவலாளி மணி, சரவணன் இருவரும், மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சரவணன், அங்கிருந்த உருட்டு கட்டையால் மணியின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த மணி, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சரவணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணன், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
31-Jul-2025