உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் மருத்துவர்களுக்கு தாய் - சேய் நல கருத்தரங்கு

தனியார் மருத்துவர்களுக்கு தாய் - சேய் நல கருத்தரங்கு

திருவள்ளூர்: தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் தாய் --- சேய், நல கருத்தரங்கு நேற்று நடந்தது.திருவள்ளூர் மா வட்ட அரசு மருத்துவ கல்லுாரியில் தனியார் மருத்துவமன மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் அளவில் இருக்க வேண்டும். சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொள்ள, தனியார் மருத்துவர்களை அணுகும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தினால், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மருத்துவ கல்லுாரி முதல்வர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், பிரபாகரன், துணை இயக்குனர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ