மேலும் செய்திகள்
மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
01-Sep-2025
பொன்னேரி;புரட்டாசி மாத எதிரொலியாக, பெரும்பாலானோர் சைவ உணவிற்கு மாறிய நிலையில், இறைச்சி கடைகள் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், இந்த மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் ஹிந்துக்கள் விரதம் இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கம். புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதையும் பெரும்பாலானோர் தவிர்த்து விடுவர். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில், இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் இருக்கும். கடந்த 17ம் தேதி புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில், இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லாமல், விற்பனை குறைந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சி மற்றும் மீன்கடைகள் வெறிச்சோடி இருந்தன. பெரும்பாலான சாலையோர மீன்கடைகள் செயல்படவில்லை. பழவேற்காடு மீன் சந்தையிலும், விற்பனை குறைந்தது. இதுகுறித்து, இறைச்சி கடை வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5:00 - 11:00 மணி வரையும், மாலை 5:00 - இரவு 8:00 மணி வரையும் விற்பனை இருக்கும். புரட்டாசி மாதம் என்பதால், இன்று வாடிக்கையாளர்கள் அதிகம் வரவில்லை. மீன்களை வாங்கி வந்தால், அவற்றை உடனடியாக விற்றுவிட வேண்டும். அவற்றை பாதுகாக்க முடியாது. விற்பனை இல்லை என்றால் வீணாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
01-Sep-2025