உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் மந்தவெளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஜாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி, விழாவின் முதல் நாளான நேற்று, பெண் பக்தர்கள் அம்மனுக்கு, 301 பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நாளை மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், நாளை மறுநாள் காலை 11:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை