உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் துவக்கம்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் துவக்கம்

திருவள்ளூர்:பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தில், புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார். சங்கத்திற்கு, 15,220 ரூபாய் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணம் மற்றும் 1.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். உறுப்பினர்கள் அனைவருக்கும் 50 கிலோ கால்நடை தீவனம் மற்றும் ஒரு கிலோ தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. மேலும், 427 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை