உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாயமான சிறுவன் மீட்பு

 மாயமான சிறுவன் மீட்பு

ஊத்துக்கோட்டை: ஜன. 23-: திருவேற்காட்டில் மாயமான சிறுவன், பெரியபாளையத்தில் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வினாயகம். இவரது 12 வயது மகன் கடந்த, 21ம் தேதி பெற்றோர் சைக்கிள் வாங்கித் தரவில்லை என கோபித்துக் கொண்டு வெளியில் சென்றார். பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கி எங்கு செல்வது என தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தான். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியபாளையம் போலீசார் சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ