உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாயமான தொழிலாளி குளத்தில் சடலமாக மீட்பு

 மாயமான தொழிலாளி குளத்தில் சடலமாக மீட்பு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் மேலப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 46; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 1ம் தேதி காலை, இறைச்சி வாங்கி வருவதாக கூறி சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். இதுதொடர்பாக, பொன்னேரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில், நேற்று மெதுார் குளத்தில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், இறந்த நபர் ஜானகிராமன் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஜானகிராமனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ---------- அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை