மேலும் செய்திகள்
இரு டூ - வீலர்கள் மோதல் திருத்தணி ஏட்டு படுகாயம்
06-Aug-2025
திருத்தணி:சாலையோர டிபன் கடைக்காரரிடம், மொபைல் போன் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெகதீசன், 40. இவர், திருத்தணி முருகன் கோவில் செல்லும் சாலையோரம் டிபன் கடையில் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் ஜெகதீசனிடம் வந்து, தன் உறவினரிடம் அவசரமாக பேச வேண்டும் எனக்கூறி, மொபைல் போனை கேட்டுள்ளார். அவசர உதவி என்பதால், ஜெகதீசன் தன் மொபைல் போனை வாலிபரிடம் கொடுத்து விட்டு, வியாபாரம் செய்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, வாலிபர் மொபைல் போனுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பினார். ஜெகதீசன் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, வாலிபரை தேடி வருகின்றனர்.
06-Aug-2025