உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடியில் ஆதார் முகாம் 100க்கும் மேற்பட்டோர் பயன்

அங்கன்வாடியில் ஆதார் முகாம் 100க்கும் மேற்பட்டோர் பயன்

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 123 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இங்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முகாம் நேற்று, சின்னம்மாபேட்டை அங்கன்வாடி மையத்தில் நடந்தது.இதில் திருவாலங்காடு, மணவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்டோர், தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்தனர்.தொடர்ந்து, நாளை மறுநாள் கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஆதார் முகாம் நடைபெற உள்ளதாக, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை