உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை மட்டத்தைவிட உயரமான பாலம் பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு

சாலை மட்டத்தைவிட உயரமான பாலம் பொன்னேரியில் வாகன ஓட்டிகள் தவிப்பு

பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வேணுகோபால் தெரு, தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா தெரு ஆகியவை சந்திக்கும் இடத்தில் மழைநீர் கால்வாயும், அதன் மீது சிறுபாலமும் அமைந்து உள்ளது. இது இரண்டு தெருக்களின் சாலை மட்டத்தைவிட உயரமாக இருக்கிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். கார், ஆட்டோ உள்ளிட்டவை வேணுகோபால் தெரு வழியாக பயணிக்க முடியாமல் மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு பயணிக்கின்றன.கால்வாய் இருந்தும் பயனின்றி, அதன் அருகிலேயே உள்ள வேணுகோபால் தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேற்கண்ட இரண்டு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் உயரமாக உள்ள சிறுபாலத்தை அகற்றிவிட்டு, அங்கு வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக அமைக்க தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் பொன்னேரி நகராட்சி நிர்வாகமும், வேணுகோபால் தெருவில் தேங்கும் மழைநீரை கால்வாய்க்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !