உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறல்

வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறல்

திருவள்ளூர்:சி.வி.நாயுடு சாலை - நேதாஜி சாலை சந்திப்பில் வேகத்தடை, சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், ஜவுளிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட வணிக வளாகங்கள் ஏராளமாக அமைந்துள்ளன.திருவள்ளூர் பஜார் வீதியில் இருந்தும், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், சி.வி.நாயுடு சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதில், சி.வி.நாயுடு சாலை - நேதாஜி சாலை சந்திப்பதால், தினமும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மேலும், திருத்தணி மார்க்கத்தில் இருந்து திருவள்ளூர் மற்றும் காமராஜர் சாலையில் இருந்து சி.வி.நாயுடு சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும், நேதாஜி சாலை சந்திப்பில் பிரிந்து செல்கின்றன. இச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால், நேதாஜி சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.எனவே, மூன்று சாலை சந்திக்கும் இடத்தில், வேகத்தடை மற்றும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !