உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுபாலம் இணைப்பு சாலை சேதம் ஆவூரில் வாகன ஓட்டிகள் அவதி

சிறுபாலம் இணைப்பு சாலை சேதம் ஆவூரில் வாகன ஓட்டிகள் அவதி

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மெதுார் பகுதியில் இருந்து, வேம்பேடு, ஆவூர், கோளூர் வழியாக தேவம்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்து உள்ளது.இந்த சாலையில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக, சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஆவூர் கிராமத்தின் அருகே உள்ள சிறுபாலத்தின் இணைப்பு சாலை சேதம் அடைந்தது.சில தினங்களுக்கு முன், அங்கு நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சேதம் அடைந்த பகுதிகளை பெயர்த்து எடுத்துவிட்டு, புதிய தார்ச்சாலை அமைக்கும்போது, அரைகுறையாக அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தொடர் வாகன போக்குவரத்தால் சீரமைக்கப்பட்ட பகுதி, தற்போது மீண்டும் சேதம் அடைந்து உள்ளது. பாலத்தின் இணைப்பு சாலை பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.இதேபோன்று, இதே சாலையில் நெல்வாயல் பகுதியிலும், இணைப்பு சாலை சேதம் அடைந்து இருக்கிறது. அவற்றை தரமாக சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி