மேலும் செய்திகள்
ஓடையை கடக்க மேம்பாலம் தடை இல்லாத போக்குவரத்து
15-Dec-2024
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் இருந்து, சானுார் மல்லாரத்திற்கு, 2014ல் தார் சாலை போடப்பட்டது. இந்த மார்க்கத்தில் பாயும் ஓடைக்கு குறுக்கே, பாலம் கட்டப்பட்டது.கடந்த 2020ல் பெய்த கனமழையின் போது இந்த பாலம் சேதம் அடைந்தது. அதை தொடர்ந்து ஓடையில் இறங்கி பகுதிவாசிகள் பயணித்து வந்தனர்.சமீபத்தில் பெய்த புயல் மழையின் போது வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த நிலையில், ஓடையின் குறுக்கே, தற்காலிகமாக கற்களை கொட்டி கரடு முரடான பாதைய ஏற்படுத்தினர்.தற்போது, அந்த வழியில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். சானுார் மல்லாவரத்தில் இருந்து, சித்துார் மாநில நெடுஞ்சாலைக்கு பயணிக்க இதுவே விரைவு சாலையாக அமைந்துள்ளதால், ஆபத்தை பொருட்படுத்தாமல் பயணித்து வருகின்றனர்.இந்த சாலையை தவிர்த்தால், சானுார் மல்லாவரத்தில் இருந்து 10 கி.மீ., துாரம் கூடுதலாக பயணித்து, சோளிங்கர் வழியாக பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15-Dec-2024