உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருவாலங்காடு:மஞ்சாகுப்பம், வரதாபுரம் கிராமத்தில், நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் ------ அரக்கோணம் நெடுஞ்சாலையில், பட்டரைப்பெரும்புதுார் அடுத்து மஞ்சாகுப்பம், வரதாபுரம் கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களுக்கும் இடைப்பட்ட பகுதிகளில், 2 கி.மீ., தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக திருவாலங்காடு, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல மக்கள் பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலை ஓரத்தில், அதிக அளவில் செடிகள் வளர்ந்து உள்ளதால், கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையோரம் ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்கள், தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். சாலை வளைவுகளில், எதிரே வரும் வாகனங்கள் அறியாமல் விபத்து நிகழும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையோரம் உள்ள செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை