உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வர்ணம் இல்லாத 17 வேகத்தடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வர்ணம் இல்லாத 17 வேகத்தடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருவாலங்காடு:பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் வர்ணம் இல்லாத 17 வேகத்தடைகள் உள்ளதால், விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது, மணவூர் ---- பேரம்பாக்கம் நெடுஞ்சாலை. இச்சாலையில், மணவூர் - களாம்பாக்கம் வரை, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம இணைப்பு சாலை, பள்ளி, அரசு அலுவலகங்கள் மற்றும் வளைவு சாலைகளில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி, 18 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாகசாலையை தவிர்த்து சின்னமண்டலி, களாம்பாக்கம், ஒரத்தூர் என, 17 இடங்களில் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் அழிந்துள்ளது. வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை